டெல்லி – லக்னோ இடையே இயக்கப்பட இருக்கும் தேஜாஸ் ரயில், காலதாமதமாக பயணித்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ரயில்வேயின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி முதன்முறையாக டெல்லி – லக்னோ மற்றும் மும்பை – அகமதாபாத் இடையே தேஜாஸ் ரயில்களை இயக்க உள்ளது.
ரயில்களை தனியார்கள் மூலம் இயக்க அனுமதிக்கும் திட்டத்தின் சோதனை முயற்சியாக இது கருதப்படுகிறது.
அந்த வகையில் டெல்லி – லக்னோ இடையே வரும் 4 ஆம் தேதி முதல் தேஜாஸ் ரயில் இயக்கப்பட இருக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த ரயில் தாமதமானால் 100 ரூபாயும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் 250 ரூபாயும் பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
ஏற்கனவே அந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான உடைமைகள் காப்பீடு உள்பட 25 லட்சம் ரூபாய் காப்பீடு இலவசமாக வழங்கப்படும் நிலையில், கூடுதலாக இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.