இலங்கை கிரிக்கெட் அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து காம்பீர் கிண்டல்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டி விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மூன்றாவது ஒரு நாள் போட்டி பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் நாளை நடைபெறுகிறது.

இதையடுத்து கராச்சி பகுதியில் இலங்கை அணிக்கு பிரமருக்கு நிகரான உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிண்டல் அடிக்கும் விதமாக பாஜகவின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் சுமார் 20 வாகனங்கள் பாதுகாப்புடன், இலங்கை அணி அழைத்து வரப்படுகிறது. மேலும் இலங்கை அணி அழைத்துவரப்படும் சாலையில் மற்ற எந்த வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த வீடியோவை வெளியிட்ட காம்பீர், காஷ்மீரில் கவனம் செலுத்தும் பாகிஸ்தான், கராச்சியின் நிலை குறித்து மறந்து விட்டதே என அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே