எய்ட்ஸ் பாதிப்பு 0.27%ஆக குறைந்து விட்டது – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கியூபாவிற்கு அடுத்தபடியாக தற்போது தமிழகத்தில்தான், தாயிடம் இருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் மாவட்ட தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றும் தன்னார்வ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சரிடம் பேசி நிதி ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

எச்.ஐ.வி பாதித்த தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க அனைத்து மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பலனாக தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுவதை முழுவதும் கட்டுப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

2013 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி பாதிப்பு 0.83ஆக இருந்ததாகவும், தற்போது 0.27 ஆக குறைந்து விட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே