எந்த நேரத்தில் அழைத்தாலும் உதவ தயார் சுபஸ்ரீ பெற்றோரிடம் விஜயகாந்தின் மகன் உருக்கம்

தன்னை மகனாக நினைத்து எந்த நேரத்தில் அழைத்தாலும் உதவ தயாராக இருப்பதாக சுபஸ்ரீ பெற்றோரிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ வீட்டிற்கு சென்ற விஜயபிரபாகரன் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சுபஸ்ரீயின் இழப்பு தன்னை மிகவும் பாதித்ததினால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும், இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே