உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவெனில் வாலறிவான் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இளவேனில் மற்ற வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி 251.7 புள்ளிகளை குவித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே