உதகையில் 2 வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறையால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் இரண்டாவது சீசன் காலமாகும். இதையொட்டி அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையுடன் வார விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மலர்கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 15 ஆயிரம் மலர்தொட்டிகளில் பலவண்ண டேலியா, சால்வியா, பிக்கோனியா, டெல்சி, பால்சியா போன்ற வகை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

மேலும் பூங்காவின் பல்வேறு பகுதியில் வண்ணமலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது.

மேலும் படகு இல்லத்தில் உள்ள மிதிபடகு, துடுப்பு படகு, மோட்டார் படகு ஆகியவற்றில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு வானுயர வளர்ந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை கண்டு வியந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே