தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்தின் நான்கு புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்க உள்ளனர். இதனால் உச்சநீதிமன்றம் தனது முழு அளவு பலம் பெற உள்ளது.
இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள வி.ராமசுப்பிரமணியம்,
பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி,
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.ரவீந்திர பட்
மற்றும் கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நாளை பதவியேற்கின்றனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். ராமசுப்பிரமணியன் பதவியேற்பதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை உச்சநீதிமன்றத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது.