விழுப்புரம் அருகே போலீசார் கண்முன்னே நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட பயங்கரம் அரங்கேறி உள்ளது. தாக்குதலை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரும் அரிவாளால் வெட்டப்பட்டடார்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி ஐயப்பன் முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த தணிகைராஜ் என்ற இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வளவனுர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டனும் மற்றொரு காவலரும் தாக்குதலை தடுக்க முயன்றனர். போலீசாரையும் மீறி தணிகைராஜை கொடூரமாக வெட்டி ஐயப்பன் படுகொலை செய்தார். சம்பவத்தின் போது காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொலையாளி ஐயப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.