மாமியாரை தெருவில் இழுத்து சரமாரியாக தாக்கிய மருமகள்..! (VIDEO)

ஹைதராபாத்தின் மல்லேபள்ளி பகுதியில் உஜ்மா என்ற பெண் மாமியாருடன் வசித்து வந்தார். அவரது கணவர் சவுதியில் பணிபுரிந்து வருவதால் மருமகள், மாமியார் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

அப்போது கணவருடன் உஜ்மாவை பேச விடாமல் மாமியார் தனிஷ்கா தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், வீட்டின் மேல்தளத்தில் மாமியாரும், கீழ்வீட்டில் மருமகளும் வசித்து வந்துள்ளனர். இதில் கீழ்வீட்டிற்கு சரியாக குடிநீர் திறந்துவிடுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் மாமியார், மருமகள் இடையே அவ்வவ்போது சிறிய அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மருமகள் உஜ்மா தனது தாயாரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போதும் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த உஜ்மா தனது தாயாருடன் சேர்ந்து மாமியார் தனிஷ்காவை தாக்கியுள்ளார்.

வீட்டில் இருந்து தலைமுடியை பிடித்து தரதரவென வெளியே சாலைக்கு இழுத்து வந்து மாமியாரை அப்பெண் கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் அப்பகுதியினர் இருவரையும் பிரித்துஅனுப்பினர்.

எனினும் இது தொடர்பாக மாமியார் தனிஷ்காவும், மருமகள் உஜ்மா பேகமும் காவல்நிலையத்தில் ஒருவருக்கொருவர் புகார் அளித்துக்கொண்டார்கள்.

விசாரணை நடத்திய போலீசாரிடம் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பின்பு, இருவரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளது. மாமியாரை மருமகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே