இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடினர்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் அதிகாலையிலேயே இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மோப்ப நாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடைமைகளை சோதனை செய்த பின்னரே  கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே