இமானுவேல்சேகரன் 62வதுநினைவு நாள் இன்று அனுசரிப்பு

சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் 62 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர், கமுதி, கடலாடியில் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கீழத்தூவல், பேரையூர் காவல் நிலையங்கள் உள்பட 225 இடங்கள் பதற்றமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் நடமாடும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே