இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு – சுனாமி எச்சரிக்கையா?

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து, இந்திய அரசின் தேசிய நில அதிர்வு ஆய்வகம் (National Center for Seismology) தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடக வலைதளத்தில், பிற்பகல் 12.31 மணியளவில் இலங்கையின் தலைநகர் கொழும்புவிலிருந்து தென்கிழக்கே 1,326 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவாகியதாக தெரிவித்தது.

இது சக்திவாய்ந்த நிலநடுக்கம்தான் என்றும், ஆனால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென இலங்கை அரசின் நிலநடுக்கத் தரவுகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. அத்துடன் இதுவரை சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே