இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு..!!!

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ள நிலையில், சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. 

புதன்கிழமை வர்த்தக நேர தொடக்கத்தில், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து வர்த்தகமானது.

அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் ஒரு கட்டத்தில் சுமார் 100 புள்ளிகள் வரை சரிந்தது.

ஆசிய பங்குச்சந்தைகளும் இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் சரிவுடன் வர்த்தகமான நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது.

நிஃப்டி துறைசார்ந்த குறியீடுகளில், ஐ.டி துறைக்கான குறியீட்டை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளின் குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

பொதுத்துறை வங்கிகளுக்கான குறியீடு அதிகபட்சமாக 2 சதவீதம் சரிவுடனும், ஆட்டோ மொபைல், வங்கிகள் மற்றும் நிதி சேவைகளுக்கான குறியீடுகள் தலா ஒரு சதவீதம் சரிவுடனும் வர்த்தகமாகி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே