2020-21 ஆம் நிதியாண்டுக்கான அடுத்த தவணையாகத் தமிழகத்துக்கு 335 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருக்கும் மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கி வரும் நிலையில் தமிழகத்திற்கு 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.335 கோடி தவணை நிதியாக மத்திய அரசு விடுவித்தது.
15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக இந்த நிதி பயனளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.491 கோடியும், அசாம் மாநிலத்திற்கு 631 கோடியும், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு 952 கோடியும், கேரளாவிற்கு 1276 கோடியும், மணிப்பூருக்கு 235 கோடியும், மேகாலாய மாநிலத்திற்கு 40 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு 118 கோடியும், நாகலாந்துக்கு 326 கோடியும், பஞ்சாபுக்கு 638 கோடியும், திரிபுராவுக்கு 269 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 423 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 417 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.