விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் அ.தி.மு.க. தலைமையகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்குள் தலைமையகத்தில் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.