ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் புதிய பேருந்து சேவையை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வில் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை எனக் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக கூறியவர், 2017 – 2018 ஆம் ஆண்டு மடிக்கணினி வழங்காத மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.