ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் ஜியோ நிறுவனம்….!

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபரை வணிகப்பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைத்தது.

தொலைத்தொடர்புத் துறையில் கடந்த 2016ம் ஆண்டு தடம் பதித்து, மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவின் நம்பர் ஒன் தொலைதொடர்பு சேவை நிறுவனமாக திகழ்ந்து வரும் நிறுவனம், ப்ராட் பேண்ட் சேவைகளையும் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சோதனை ஓட்டத்தை நடத்திப்பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம், ப்ராட்பேண்ட் சேவை செப்டம்பர் மாதம் 5ம் தேதி நாடுமுழுவதும் உள்ள 1600 நகரங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த பிராட்பேண்ட் சேவையைப் பெறுவதற்காக ஒரு கோடி பேருக்கும் மேல் முன்பதிவு செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜியோ ஃபைபர் டேட்டா ப்ளான்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது. குறைந்தபட்சம் 699 ரூபாயிலிருந்து 8499 ரூபாய் வரையிலும், 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து 1ஜிபிபிஎஸ் வேகம் வரையிலும் உள்ள ப்ளான்களை அறிவித்துள்ளது.

இந்த ப்ளான்களை, வெண்கலம்(Bronze), வெள்ளி(Silver), தங்கம்(Gold),வைரம் (Diamond), டைட்டானியம் (Titanium) என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த அனைத்தும் அன்லிமிட்டட் டேட்டாக்களை வழங்குகிறது. இந்த ப்ளான்களை மூன்று மாதம், 6 மாதம், ஒரு ஆண்டுக்கு சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளலாம். ப்ளான்களில் வழங்கப்பட்ட டேட்டா அளவு முடிந்தவுடன் 1 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Bronze Plan : வெண்கல வகையிலான ப்ளானில் 100 ஜிபி+50 ஜிபி டேட்டாவை, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 699 ரூபாய்க்கு வழங்குகிறது.

வருடாந்திர சப்ஸ்க்ரிப்ஸ்னில் இரண்டு மாதம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டியைப் பெறலாம். அதோடு 2400ஜிபி(Double) டேட்டாவைப் பெறலாம்.

ஆறு மாத சப்ஸ்க்ரிப்ஸனில், கூடுதலாக ஒருமாத வேலிடிட்டியையும் 50% கூடுதல் டேட்டா(980 ஜிபி)வையும் பெறலாம்.

மூன்றுமாத சப்ஸ்க்ரிப்ஸனில், 25% கூடுதல் (375ஜிபி) டேட்டாவைப் பெறலாம்.

Silver Plan வெள்ளி வகையிலான ப்ளானில் 200 ஜிபி+200 ஜிபி டேட்டாவை, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 849 ரூபாய்க்கு வழங்குகிறது. 

வருடாந்திர சப்ஸ்க்ரிப்ஸ்னில் இரண்டு மாதம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டியைப் பெறலாம். அதோடு 4800ஜிபி(Double) டேட்டாவைப் பெறலாம்.

ஆறு மாத சப்ஸ்க்ரிப்ஸனில், கூடுதலாக ஒருமாத வேலிடிட்டியையும் 50% கூடுதல் டேட்டா(1800 ஜிபி)வையும் பெறலாம்.

மூன்றுமாத சப்ஸ்க்ரிப்ஸனில், 25% கூடுதல் (750ஜிபி) டேட்டாவைப் பெறலாம்.

Gold Plan : தங்கம் வகையிலான ப்ளானில் 500 ஜிபி மற்றும் கூடுதல் 250 ஜிபி டேட்டாவை, 250 எம்பிபிஎஸ் வேகத்தில் 1,299 ரூபாய்க்கு வழங்குகிறது. 

வருடாந்திர சப்ஸ்க்ரிப்ஸ்னில் இரண்டு மாதம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டியைப் பெறலாம். அதோடு 12,000ஜிபி(Double) டேட்டாவைப் பெறலாம்.

ஆறு மாத சப்ஸ்க்ரிப்ஸனில், கூடுதலாக ஒருமாத வேலிடிட்டியையும் 50% கூடுதல் டேட்டா(4500 ஜிபி)வையும் பெறலாம்.

மூன்றுமாத சப்ஸ்க்ரிப்ஸனில், 25% கூடுதல் (1875ஜிபி) டேட்டாவைப் பெறலாம்.

Diamond Plan வைரம் வகையிலான ப்ளானில் 1250 ஜிபி மற்றும் கூடுதல் 250 ஜிபி டேட்டாவை, 500 எம்பிபிஎஸ் வேகத்தில் 2,499 ரூபாய்க்கு வழங்குகிறது. 

வருடாந்திர சப்ஸ்க்ரிப்ஸ்னில் இரண்டு மாதம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டியைப் பெறலாம். அதோடு 30,000ஜிபி(Double) டேட்டாவைப் பெறலாம்.

ஆறு மாத சப்ஸ்க்ரிப்ஸனில், கூடுதலாக ஒருமாத வேலிடிட்டியையும் 50% கூடுதல் டேட்டா(11,250 ஜிபி)வையும் பெறலாம்.

மூன்றுமாத சப்ஸ்க்ரிப்ஸனில், 25% கூடுதல் (4,687ஜிபி) டேட்டாவைப் பெறலாம்.

Platinum Plan : ப்ளாட்டினம் வகையிலான ப்ளானில் 2500 ஜிபி டேட்டாவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் 3,999 ரூபாய்க்கு வழங்குகிறது.

வருடாந்திர சப்ஸ்க்ரிப்ஸ்னில் இரண்டு மாதம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டியைப் பெறலாம். அதோடு 60,000ஜிபி(Double) டேட்டாவைப் பெறலாம்.

ஆறு மாத சப்ஸ்க்ரிப்ஸனில், கூடுதலாக ஒருமாத வேலிடிட்டியையும் 50% கூடுதல் டேட்டா(22,500 ஜிபி)வையும் பெறலாம்.

மூன்றுமாத சப்ஸ்க்ரிப்ஸனில், 25% கூடுதல் (9,375ஜிபி) டேட்டாவைப் பெறலாம்.


Titanium Plan : டைட்டானியம் வகையிலான ப்ளானில் 5000 ஜிபி டேட்டாவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் 8,499 ரூபாய்க்கு வழங்குகிறது.

வருடாந்திர சப்ஸ்க்ரிப்ஸ்னில் இரண்டு மாதம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டியைப் பெறலாம். அதோடு 1,20,000ஜிபி(Double) டேட்டாவைப் பெறலாம்.

ஆறு மாத சப்ஸ்க்ரிப்ஸனில், கூடுதலாக ஒருமாத வேலிடிட்டியையும் 50% கூடுதல் டேட்டா(45,000 ஜிபி)வையும் பெறலாம்.

மூன்றுமாத சப்ஸ்க்ரிப்ஸனில், 25% கூடுதல் (18,750ஜிபி) டேட்டாவைப் பெறலாம்.

இவைகள் மட்டுமல்லாமல்,

1.இந்தியா முழுமைக்கும் இலவச அழைப்புகளைப் பெறலாம்.

2. 1200 ரூபாய் மதிப்புள்ள டிவி வீடியோ காலிங் வசதியை இலவசமாகப் பெறலாம்.

3. 1200 ரூபாய் மதிப்புல்ல Zero – latency விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாடலாம்.

4. வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

5. நார்டான் ஆண்ட்டிவைரஸ் சாஃப்ட்வேரை 5 சாதனங்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

6. விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் முதல்நாள் முதல்காட்சியை வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம். முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை பார்க்கலாம். இது டைமண்ட், ப்ளாட்டினம், டைட்டானியம் வகை ப்ளான்களுக்கு மட்டும் பொருந்தும்.

இவை மட்டுமல்லாது, வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் சில சலுகைகளை ஜியோ ஃபைபர் வழங்குகிறது.

இந்த ஆஃபரில், ஜியோ ஹோம் கேட்வே எனப்படும் 5000 ரூபாய் மதிப்புள்ள ரவுட்டரையும், 6400 ரூபாய் மதிப்புள்ள ஜியோ 4K செட் டாப் பாக்ஸ் ஆகியவற்றையும் வழங்குகிறது.

பொழுது போக்கு அம்சங்களை பொறுத்தவரை, வெண்கலம் ப்ளானில் ஜியோ சினிமா மற்றும் ஜியோ சாவன் ஆகிய ஆப்களை 3 மாதங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெள்ளி ப்ளானில் நெட் ஃப்லிக்ஸ் உள்ளிட்ட OTT app களை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்ற ப்ளான்களில், OTT apps என்று அழைக்கப்படும் நெட் ஃப்லிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஸீ5, ஜியோ சினிமா, ஜியோ டிவி உள்ளிட்டவற்றை ஓராண்டு சப்ஸ்க்ரிப்ஸனுக்கு பெறலாம்.

ஜியோ ஃபாரெவர் ப்ளானில் வருடாந்திர கோல்ட் ப்ளானில் Muse 2 ப்ளூடூத் ஸ்பீக்கர்களைப் பெறலாம். வருடாந்திர வெள்ளி ப்ளானை சப்ஸ்க்ரைப் செய்பவர்கள் Thump 2 ப்ளூடூத் ஸ்பீக்கர்களைப் பெறலாம்.

வைரம், ப்ளாட்டினம் மற்றும் டைட்டானியம் ப்ளான்களில் இலவச ஹெச்டி தொலைக்காட்சியை பெறலாம். தொலைக்காட்சியின் அளவு ப்ளானைப் பொறுத்து மாறும். தங்கம் வகையிலான ப்ளானை சப்ஸ்க்ரைப் செய்பவர்களும் 24 இன்ச் ஹெச்டி தொலைக்காட்சியைப் பெறலாம். ஆனால் அதற்கு அவர்கள் இரண்டாண்டுகளுக்கு ப்ளானை சப்ஸ்க்ரைப் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஃபைபர் இணைப்பை எப்படி பெறுவது?

ஜியோ ஃபைபர் இணைப்பை பெற விரும்புபவர்கள் ஜியோ நிறுவனத்தின் இணையதளமான jio.com மற்றும் MyJio ஆப்பிலும் முன்பதிவு செய்யலாம். ஜியோ ஃபைபர் சேவை உங்கள் பகுதியில் வழங்கப்பட்டால், அந்நிறுவனத்தின் பணியாளர் உங்களை இணைப்பிற்காக அணுகுவார்.

ப்ரிவியூ ஆஃபரில் இணைப்பை பெற்றவர்கள் எவ்வளவு காலத்திற்கு அதை பயன்படுத்த முடியும்?

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சோதனை ஓட்டத்தை சில நகரங்களில் ஆரம்பித்தபோது, ப்ரிவியூ ஆஃபர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ப்ராட்பேண்ட் சேவையை வழங்கியது.

அவர்களிடமிருந்து, ரவுட்டர் வழங்குவதற்காக ரூபாய் 4,500 மற்றும் ரூபாய் 2,500 ஆகிய திரும்பபெறும் கட்டணங்களை வசூலித்திருந்தது. அந்த பயனாளர்கள் விரும்பினால், கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் சேவைக்கு மாறிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்காக, ஜியோ ஃபைபர் பணியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகுவார்கள் என்றும், அதுவரை எந்த தடையும் இன்றி ஜியோ ஃபைபர் இணைய சேவையை பெறலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே