மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய நிதியமைச்சர், நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்றும்; மாநிலங்களுக்கு உதவும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து மாநிலங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க ஆலோசிக்கப்படும்.

நடப்பாண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களே ஏற்றுக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வாய்ப்புகளை நிதியமைச்சகம் ஆர்பிஐயுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் முடிவை அறிவிக்கும் என்றும் வரி உயர்வு பற்றி பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே