குறைவான உணவுடன் சிறை நாட்களைத் தொடங்கிய சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மேற்கத்திய கழிவறை உடன் தனி அறை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ரோஸ் அவென்யுவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அங்கு இருந்து திஹார் ஜெயிலுக்கு கொண்டுசெல்லப்பட்ட சிதம்பரம் மருத்துவ சோதனைகளுக்கு பின் அமலாக்கத் துறை வழக்கு கைதிகளுக்கான 7-ஆம் எண் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தனது கண்ணாடியையும் அத்தியாவசிய மருந்துகளை எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு தனி அறையில் மேற்கத்திய கழிப்பறை வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்செயல் நிகழ்வா கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்த அதே சிறை அறை சிதம்பரத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதால் அவர் சிறைக்கு கொண்டு வருவதை முன்கூட்டியே உணர்ந்து சிறை நிர்வாகம் முன்னதாகவே சிறைகளை தயார் செய்து வைத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் குறைவான உணவு உட்கொண்டு தனது சிறை நாட்களை தொடங்கியதாகவும், நேற்றிரவு அவர் ரொட்டி,பருப்பு,காய்கறிகள் சிறிதளவு சோறு உண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற சிறைவாசிகளை போல சிதம்பரமும் நூலகத்திற்கு செல்ல முடியும் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தொலைக்காட்சி பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே