அரியவகை புலிக் குட்டிகளின் சேட்டைகளைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் பொதுவெளியில் விடப்பட்ட புலிக்குட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

வில்ஷைர் விலங்கியல் பூங்காவில் அரிய வகையான அமூர் வகைப் புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புலிகளில் யனா என்ற பெண் புலி இரண்டு குட்டிகள் ஈன்றது.

3 மாதங்களுக்கு முன் பிறந்த இந்தக் குட்டிகளில் ஆணுக்கு ரஷ்டி என்றும், பெண் குட்டிக்கு யுகி என்றும் பெயரிடப்பட்டன. இந்தக் குட்டிகள் தற்போது பொது வெளியில் திறந்து விடப்பட்டுள்ளன.

இந்தக் குட்டிகளின் சேட்டைகளை பார்ப்பதற்கு அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே