அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்- கலக்கும் டெல்லி

டெல்லியில் மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. அக்டோபர் 29ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின்போது மாநகர பேருந்துகளில் உள்ள நடத்துனர்களிடமிருந்து அதற்கான பாஸை பெற்றுக்கொள்ளலாம். இலவசமாக பயணிக்க விரும்பாத பெண்கள் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே