அம்பேத்கர் சிலை உடைப்பு… தனிச்சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது- நீதிமன்றம் பதில்!

தலைவர்களின் சிலை உடைப்பு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அங்கு இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பார்வேந்தன் முறையீடு செய்தார். வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும் என்று கூறினார். வழக்கறிஞர் பார்வேந்தனின் முறையீட்டை கேட்ட நீதிபதிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி சட்டம் ஏற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே