அமேசான் மலைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ

அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க பொலிவியா இரு அண்டை நாடுகளின் கூட்டு உதவியை நாடியுள்ளது.

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் காடுகள். இங்கு அரிய வகை மரங்கள் மூலிகைகள் விலங்குகள் மற்றும் பறவைகள் அதிகம் உள்ளன கிட்டத்தட்ட 55 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மழை காடுகளுக்கு இடையே அமேசான் நதி ஓடுகிறது. பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் இந்த அமேசான் மழைக்காடுகளில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது. இதனால் பலவித தாவரங்கள் விலங்குகள் தீயில் கருகி வருகின்றன இதனிடையே பொலிவியாவில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் கரும்புகை வெளியேறியது.

இதனை அணைக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் ஆயுதப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொலிவியா பிரேசில் மற்றும் பராகுவே ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் எல்லைப்பகுதியான ரியோ நீக்ரோ பாலத்திலும் காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அச்சமடைந்து உள்ள பொலிவியா தீயை அணைக்க அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் பராகுவே உதவியை நாடியுள்ளது. கடந்த ஆண்டை விட அமேசான் வனப்பகுதிக்குள் அதிக பரப்பளவு தீப்பற்றியதால் பருவ நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என உலக நாடுகளிடையே அச்சம் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே