அமெரிக்காவின் பஃபல்லோ நகரில் கால்நடை பண்ணையை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கேயுள்ள பஃபல்லோ கால்நடை பண்ணையை பார்வையிட்டார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் தமிழக அரசு சார்பில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. அந்த பூங்காவில் அமைக்கப்பட வேண்டிய சர்வதேச தொழில் நுட்பங்கள், கால்நடை வளர்ப்பில் உள்ள நவீன முறைகளை அறிந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ நகருக்கு சென்றார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அந்நகரில் உள்ள கால்நடை பண்ணைக்கு சென்று அங்கு கடைபிடிக்கப்படும் கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த பயணத்தின்போது அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.சி. சம்பத், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் ஷண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே