அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது

மதுரை அருகே உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகரை கைது செய்த காவல்துறையினர், மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேனர் மற்றும் போஸ்டர் விளம்பரங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை தத்தநேரி இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு உள்ள சுவர்களில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு உரிய அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனையடுத்து போக்குவரத்துப் பாதையில் மக்களின் கவனத்தை திசை திருப்பியதாகவும், பொது இடத்தின் அழகை சீர் குழைத்ததாகவும், மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஷ்குமார், நிர்வாகி ஜெயின்கார்த்திக் ஆகிய இருவர் மீது செல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

தொடர்ந்து ஜெயின்கார்த்திக்கை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரையும் தேடி வருகிறார்கள்.

மதுரை அருகே உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே