குழந்தை பிறப்பை அறிவித்த ‘வலிமை’ பட நடிகை!

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டனர்.

தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் வலிமை பட நடிகை.

பிக் பாஸ் மலையாளம் 1-ல் கலந்துக் கொண்ட பேர்ல் மானே மற்றும் ஸ்ரீனிஷ் அரவிந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இது குறித்து சமூக வலைதளத்தில், “மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்… நாங்கள் 100 நாட்கள் ஒன்றாக இருந்தோம், வெளியில் எங்களுக்காக என்ன இருக்கும் என்பதைப் பற்றிய க்ளூ எதுவும் இல்லை.

ஆனால் நாங்கள் வெளியே வரும்போது விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்… கடவுள் கனிவானவர்… நாங்கள் அதிக அன்பைப் பெற்றோம். அதிக சுதந்திரம், அதிக கொண்டாட்டம் மற்றும் அதிக மகிழ்ச்சி… ‘லவ் ஆர்மி’ என்ற பெரிய குடும்பம் எங்களை வரவேற்க காத்திருந்தது. அவர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களுடன் வாழ்க்கையை தொடங்குகிறோம்” என அறிவித்திருந்தனர்.

முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பேர்ல் – ஸ்ரீனிஷ் தம்பதியினர், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டனர். பிறந்த குழந்தையின் ஒரு படத்தைப் பகிர்ந்து, பேர்ல் ஒரு உணர்வுப்பூர்வமான குறிப்பை எழுதியுள்ளார். இவர் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே