அடுத்த ”சூப்பர் ஸ்டார்” விஜய் – விஜயின் தாயார் ஷோபா கூறினார்

தமிழ் திரைஉலகில் தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவருடைய தாய் ஷோபா குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு அவரின் தாய் சோபா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மழலைப் பருவத்தில் இருந்து பெரும் ரசிகர்கள் கூட்டத்தால் கொண்டாடப்படும் நட்சத்திரமாய் விஜய் வளைந்தது வரை சில நினைவுகளை நிகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஈன்றெடுத்த சிசு கோடானக்கோடி தாய்மார்கள் மற்றும் ரசிகர்களின் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதை காண்கையில் இமையின் ஓரம் சிறு ஈரம் கசிந்து வடிகிறது என்று எழுதியுள்ளார்.

நடிகர் விஜய்யின் சிறுவயது குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ள சோபா தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட “பிகில்” என்று கடிதத்தை முடித்து உள்ளார் ஷோபா.

இந்த கடிதத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் விஜயை அவர் குறிப்பிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே