அக்டோபர் 6ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அடுத்த மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி ஆக்கப்பணிகள், கட்சி சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு முதல் முறையாக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே