தேமுதிக – அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி..!!

அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பேர்ச்சுவார்தைக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சுதீஷ் உள்ளிட்டவர்கள் வராத நிலையில், அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஓட்டல் லீலா பேலசில் அதிமுகவின் வைத்திலிங்கம், கேபி முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் பேச்சுவார்த்தையில் தேமுதிகவின் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் பங்கேற்றுள்ளனர்.

பாமகவுக்கு இணையான தொகுதிகளை தேமுதிக கேட்கும் நிலையில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு வீச்சில் பரப்புரை செய்ய இயலாத சூழல் மற்றும் வாக்கு சதவீதம் சரிவால் தொகுதிகளை குறைத்து கொள்ள அதிமுக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக ராஜ்யசபா சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி என தகவல் கூறப்படுகிறது.

கடந்த தேர்தல் கூட்டணியின் போது பாமகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

நாளை இறுதி எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே