இளைஞர் ஒருவர் குக்கரை திருமணம் செய்த சம்பவம் சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.
உலக ஃபேமஸ் ஆவதற்காக வித்தியாசமான முயற்சிகளை சிலர் மேற்கொள்வார்கள்.. சிலர் ஆபத்தான செயலிலும், சிலர் அபார ஆற்றலிலும் பல்வேறு செயல்களை புரிந்து, உலக மக்களின் கவனத்தை திருப்புவார்கள்.
ஆனால், உயிரை பணயம் வைத்து சாகசம் புரிவோரைவிட, மேலும் சிலர் மகா மட்டமான காரியங்களை செய்தே பரபரப்பாக பேசப்பட்டு விடுவார்கள்.. அப்படி ஒரு மனிதர்தான் இவர்.
இந்தோனேசியாவை சேர்ந்த அந்த இளைஞர் பெயர் கொய்ருல் அனம்.. அரிசி வேக வைக்கும் குக்கரை கல்யாணம் செய்து கொண்டார்.. இது தொடர்பான போட்டோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. அந்த போட்டோவில் மாப்பிள்ளை கோலத்தில் காணப்படுகிறார் கொய்ருல்.. , இந்தோனேசியாவின் பாரம்பரிய திருமண உடை அணிந்திருந்தார்.. கழுத்தில் மாலை அணிந்துள்ளார்.. குக்கரையும் அலங்காரம் செய்துள்ளார்… அதற்கு ஒரு முக்காடு போட்டிருந்தார்.
பதிவு திருமணம்
பிறகு, தன் திருமணத்துக்கான பதிவில் கையெழுத்திடுகிறார்.. அவருக்கு பக்கத்திலேயே குக்கரும் உள்ளது.. பதிவாளர் முன்னிலையில் கல்யாணம் முடிந்ததும், குக்கருக்கு அவர் முத்தமிடுகிறார்.. பதிவு திருமணத்துக்கு கையெழுத்து போடுவதற்கு அருகில் ஒரு நண்பரும் இருக்கிறார்… அதாவது முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.. இந்த போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் பரபரப்பாக வைரலாகின.
விளக்கம்
“குக்கர் நான் சொல்வதை எல்லாம் கேட்கிறது.. குக்கர் வெள்ளையாக இருக்கிறது.. எனக்கு சாபப்டு வேகவைத்து தருகிறது.. என்னிடம் அன்பாக இருக்கிறது” என்று மேலும் பதிவிட்டிருந்தார்.. இந்த பதிவும் சேர்த்து வைரலானது… ஆனால், கல்யாணம் செய்த குக்கரை 4 நாட்களிலேயே விவாகரத்து செய்து விட்டதாக கொய்ருல் தெரிவித்துள்ளார்… அதற்கு அவர் சொன்ன காரணம், அந்த குக்கர் அரிசியை மட்டுமே வேக வைக்கிறது, அதனால்தான் விவாகரத்து செய்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்..
முன்னணி
சோஷியல் மீடியாவில் தான் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாடம் கொய்ருல் செய்ததாக கருத்துக்கள் குவிந்து வருகின்றன.. இது முதல்முறையல்ல, கொய்ருல் பல முறை இப்படி வித்தியாசமாக ஏதாவது செய்து இந்தோனேஷிய மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்தான்.. இப்போதும் சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் இவர் முன்னணியில் இடம்பெற்றிருந்தார்.
திருமணம்
திருமணப் பதிவுகளை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர்.. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான ஷேர்களும் சென்றன.. இப்படித்தான், கடந்த வருடம் பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் டியோகோ ரபேலோ என்பவர், ஒரு பெண்ணை நிச்சயம் செய்தார்.. பிறகு அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது.. அதனால், தன்னையே திருமணம் செய்து கொண்டார்… கிறிஸ் கலேரா என்ற மாடல் அழகியும் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஈர்த்தது நினைவுகூரத்தக்கது.