1- 8ஆம் வகுப்பு பள்ளிகளை திறப்பது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், இணையவழியிலும் மாணவர்களுக்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்து, முதற்கட்டமாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறையுடன் திறக்கப்படும். மாணவர்கள் கற்றலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்ய, அரசு இம்முடிவை எடுத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ” 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கட்டாயம் திறக்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போல, நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

நவம்பர் 1 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. மறுபரிசீலனை செய்யும் எண்ணமும் இல்லை. பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகளை செலுத்திவிட்டனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறையுடன் பள்ளிகள் திறக்கப்படும் ” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே