நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார்.
தனித்து உரையில் முதல்வர் கூறியதாவது, ” கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் 17,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் சென்னையில், கொரோனா பரவலை தடுக்க 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காய்ச்சலை கண்டறிய 600 முகாம்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிக அளவு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், ஒரே மண்டலத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம்” என தெரிவித்துள்ளார்.



 
							