ஆதார் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து எளிதில் இ-பாஸ் பெறலாம்… சென்னை மாநகராட்சி..!!

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ – பாஸ் பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தொடரும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ – பாஸ் பெறலாம் என கூறினார்.

புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இ-பாஸ் வழங்குவதில் இருந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி தற்போது 30% – 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருகிறோம் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே