மிக மோசமான நிலையில் பிரேசில், அமெரிக்கா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.72 கோடியை தாண்டியது..!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.60 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 127,265,260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 102,550,774 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27லட்சத்து 88 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 21,925,686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93,064 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  –  பாதிப்பு- 30,917,130 , உயிரிழப்பு –  562,012, குணமடைந்தோர் – 23,348,504
இந்தியா   –   பாதிப்பு- 11,971,004, உயிரிழப்பு –  161,586, குணமடைந்தோர் –  11,321,578
பிரேசில்   –   பாதிப்பு -12,490,362, உயிரிழப்பு –  310,694, குணமடைந்தோர் –   10,879,627
ரஷ்யா    –   பாதிப்பு – 4,510,744, உயிரிழப்பு –   97,404, குணமடைந்தோர் –   4,130,498
இங்கிலாந்து – பாதிப்பு – 4,329,180, உயிரிழப்பு –  126,573, குணமடைந்தோர் –  3,787,312

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே