சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,68,04,253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,68,23,570 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3,37,56,959 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 12,05,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,18,61,290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 85,362 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 94,73,911 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,36,471 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசிலும், நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே