உலகத்தில் வாழும் ஜீவராசிகளிலேயே மிகவும் போற்றுதலுக்குரிய ஒரே இனம் பெண் இனம் மட்டுமே.

அந்த பெண்ணினத்திற்கான இன்று கொண்டாடப்படும் மகளிர் தின விழாவில், பெண்மையை வணங்கி, இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

பெண் என்பவள் போற்றத் தகுந்தவள். மதிக்கத் தகுந்தவள். வணங்கத் தகுந்தவள். பல தகுதிகளுக்கு உள்ளானவர்கள் பெண்கள்.

பூமியில் பிறந்த பெண், மகளாய், தங்கையாய், அக்காவாய், அண்ணியாய், மனைவியாய், நாத்தனாராய், மாமியாராய் , பாட்டியாய் இப்படி பல இடங்களிலும் பல விதங்களில் பிறவிகள் எடுத்துள்ளவர்தான் பெண்.

அனைத்து ஜீவராசிகளைப் படைத்து, உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்தான் இறைவன். அனைத்து உயிர்களையும் யோசிக்காமலேயே படபடவென படைத்து விட்டான் இறைவன்.

ஆனால், பெண்னை படைக்கும் போது மட்டும், நீண்ட நாட்கள் யோசித்து, யோசித்து படைப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறார் இறைவன். இதைக் கவனித்துக் கொண்டிந்த இறைவனின் சீடர், சுவாமி, அனைத்து உயிரினங்களையும் உடனுக்குடன் படைத்து விட்டீர்களே, பெண்ணை படைக்கும் போது மட்டும் ஏன், இப்படி யோசிக்கிறீர்கள். படைப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறீர்களே, ஏன்? என்னவாயிற்று எனக் கேட்கிறார்.

அதற்கு இறைவன், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் உடனே படைத்து, சிருஷ்டித்து உயிர் கொடுத்து விட்டேன். அதில், எனக்கு எந்த விதக் குழப்பமும், தயக்கமும் இல்லை.

ஆனால், பெண் என்பவள் மற்ற ஜீவராசிகளைப் போல் இல்லை.

பெண்ணைப் படைக்கும் போது, ஆணைப் போல் இல்லாமல், அவளுக்குள் பல விஷயங்களைப் புகுத்த வேண்டும் என்கிறார்.

புரியவில்லை சுவாமி என சிஷ்யர் சொல்கிறார்.

ஆண்கள், எடுத்தோம், கவிழ்த்தோம் என எதையும் யோசிக்காமல் செய்து விடுவார்கள். துண்டைத் தூக்கி தோலில் போட்டுக் கொண்டு போய் விடுவார்கள்.

ஆனால், பெண் என்பவள் அப்படியில்லை. அவளுக்கென நிறைய வரைமுறைகளும் உள்ளன.

பெண்களுக்குள் பணிவு, துணிவு, பண்பு, அன்பு, பாசம், ஒழுக்கம், காதல், கனிவு, கோபம், வருத்தம், தயக்கம், கூச்சம், அச்சம், தாய்மை என இவைகள் அனைத்தும் கொண்டவள்தான் பெண்மை.

அதனால்தான் பெண்மையைப் படைக்க இவ்வளவு யோசனை. தாமதம் என்றார். உலகத்தில் உள்ள அனைத்தையும் சுமக்கக் கூடியவள் ஒரு பெண். தாங்கும் சக்தி கொண்ட பூமிக்கு பூமாதேவி என்றுதான் பெண்ணின் பெயரை சூட்டப்பட்டுள்ளது.

இன்றைய மகளிர் தின நாளில் அனைத்து பெண்களையும் வணங்கி, வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே