உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் – லார்ட்ஸ் மைதானத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றம்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் மோதவுள்ளன. இந்த இறுதி போட்டி கிரிக்கெட்டின் தாய்மண்ணான இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18 – 22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்திற்கு பதிலாக இறுதி போட்டியை வேறொரு மைதானத்தில் போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா தொற்றின் பரவலினால் வீரர்களை பயோ  பபூளில் வைப்பது சற்று சவாலான காரியம் என்பதால் இந்த திட்டத்தை ஐசிசி முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனும் ஐசிசி பேசி வருகிறது. 

அதன்படி இந்த இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள Ageas பவுல் மைதானத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மைதானத்தில் பயோ பபூளில் இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. கூடவே வீரர்களை மைதானத்தை ஒட்டியுள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைப்பதும் எளிது என சொல்லப்படுகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே