திமுக எம்.பி.க்கள் மீது மே.29 ஆம் தேதி வரை கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர்.

அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம், இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இது கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தெரிகிறது.

விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கபட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் ஜாமீன் கோரியும் தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்தனர்.

பட்டிலிய மக்கள் குறித்து தயாநிதி மாறன் அவதூறு பேசியதாக தொரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யக்கூடும் என்பதால் மனுதாக்க செய்தனர்.

இந்நிலையில், திமுக எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்பிக்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது வரும் மே 29 ஆம் தேதிவரை போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே