சென்னை மின்சார ரயிலில் இன்று முதல் பெண்களுக்கு அனுமதி..!!

புறநகர் ரயில்களில் இன்று முதல் பெண்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில்களில், இன்று முதல் அனைத்து பெண் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.

அலுவலக நேரமான காலை 7 -10 மணி வரையும், மாலை 4:30 -7:30 மணி வரை ஆகிய ‘பீக் ஹவர்’ நேரங்களில் மற்ற பெண்களுக்கு அனுமதி இல்லை.

அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டுமே அந்த நேரங்களில் அனுமதி அளிக்கப்படும்.

இந்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் அனைத்து பெண்களும் பயணிக்கலாம்.

இதன்காரணமாக பீக் ஹவர்சில் ரயில் நிலையம் வந்த அலுவலகம் செல்லாத பெண்களுக்கு டிக்கெட் தர மறுக்கப்பட்டது. மேலும் 10 மணிக்கு மேல்தான் பெண் பயணிகளுக்கு கவுண்டர்களில் டிக்கெட் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. எனவே அனைத்து நேரங்களிலும் பெண் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே