இந்தியாவில் அதிக திறன் கொண்ட ரயில் எஞ்சின் செயல்பாட்டுக்கு வந்தது!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12,000 குதிரைத்திறன் (HP) கொண்ட இன்ஜினை இந்திய ரயில்வேத்துறை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அல்ஸ்டாம் நிறுவனத்தால் பீகார் மாநிலம் மதேபுரா இன்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலையில் 12,000 குதிரைத்திறன் கொண்ட இந்த ரயில் எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் உள்ள அதிக திறன் கொண்ட இன்ஜின் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் 800 லோகோக்களும் பெங்களூருவில் உள்ள பொறியியல் நிறுவனம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் ரயில், நேற்று (மே 19) பிற்பகல் 2:08 மணிக்கு கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட தீன் தயாள் உபாத்யாயா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 

118 பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயில் பர்வாடிஹ் ரயில் நிலையம் வரை சோதிக்கப்பட்டது.

இந்த எஞ்சினுக்கு WAG12 என பெயரிடப்பட்டு 60027 என்ற எண் அளிக்கப்பட்டுள்ளது.

அதிக குதிரைத்திறன் கொண்ட இன்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் 6வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.

வழக்கமான மின்வழித் தடத்திலும், அதிக உயரத்தில் மின்பாதை உள்ள தடங்களிலும் பயணிக்கக்கூடிய வகையில் இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் வசதி (Regenerative) இருப்பதால், இது செயல்படும் போது கணிசமாக ஆற்றல் சேமிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் சரக்கு ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரித்த பயன்படுகிறது.

மதேபுரா இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையில் அடுத்த 11 ஆண்டுகளில் 12,000 குதிரைத்திறன் கொண்ட 800 எஞ்சின்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் போக்குவரத்துக்கு அதிக திறன் கொண்ட இந்த இன்ஜின் மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ரயில்வேதுறைக்கும், அல்ஸ்டாம் நிறுவனத்துக்குமிடையே மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாக 25,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே