ஊரடங்கு நீட்டிப்பா? – மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் வருகிற 29ஆம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுமா அல்லது அன்றுடன் நிறைடையுமா என்கிற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் வரும் 29ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன. 

மேலும் அந்த அந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே