தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித் துறை அமைக்கக் கூடாது? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறை அல்லது தனி அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த, உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறை அல்லது தனி அமைப்பை ஏன் ஏற்படுத்தக்கூடாது.

நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வருங்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள்.கடந்த 1980ம் ஆண்டு தமிழகத்தில் ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட எத்தனை நீர்நிலைகள் இருந்தன.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவ.,25க்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே