அண்டை நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது ஏன்?

அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை விடவும் அதிக விலை கொடுத்து பெட்ரோல் டீசலை வாங்கிக்கொண்டிருக்கிறோம். வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் தனி நபர் வருமானம் குறைவாக இருக்கும்போது, எரிபொருள் விலையானது வளர்ந்த, பணக்கார நாடுகளுக்கு இணையாக விற்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையேற்றத்தை நிறுத்தி வைத்திருந்தன. தற்போது ஜூன் 7 – ம் தேதியிலிருந்து மீண்டும் பெட்ரோல் டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். ஜூன் 7 – ம் தேதிக்குப் பிறகு, இந்தியாவில் மட்டும் சராசரியாக ஒரு லிட்டருக்குப் பெட்ரோல் விலை 8.5 ரூபாயும், டீசல் விலை 10.01 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.


மத்திய அரசு சுங்க வரியையும், மாநில அரசு விற்பனை வரியையும் தொடர்ந்து உயர்த்தி வருவதே இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாடெங்கும் ஒரே மாதிரி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் ஜி.எஸ்.டிக்குக் கீழே கொண்டுவரப்படவில்லை. அப்படிக் கொண்டுவரப்பட்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

கோவிட் 19 ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தன. ஆனால், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரியை அதிகபட்சமாக உயர்த்தியது. உயர்த்தப்பட்ட சுங்க வரியால் பெட்ரோல் விலை ரூ.13 வரையிலும் டீசல் விலை ரூ 10 வரையிலும் உயர்ந்தன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 83.18 ரூபாய்க்கும், டீசல் விலை 77.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால், கச்சா எண்ணெய்யை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறோம்” என்று எரிபொருள் மீதான விலை உயர்வை நியாயப்படுத்துகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும் கீழே சரிந்தபோதும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தன. அதைப்பற்றி மட்டும் வாயைத் திறக்க மறுக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

டாலரின் மதிப்பு அதிகமாகும் போது, இந்தியாவின் இறக்குமதி பாதிக்கப்படுவதைப் போன்று தானே அண்டை நாடுகளின் இறக்குமதியும் பாதிக்கப்படும். அந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழவே செய்கிறது…

பெட்ரோலுக்கு 227 சதவிகிதம் வரிவிதிப்பு

ஜூன் 16 – ம் தேதி எரிபொருள் நிலையங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.22.44 க்கு வழங்கப்பட்டது. ஆனால், இதையே நுகர்வோர்கள் 76.99 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. இதில், டீலர் கமிஷன் ரூ. 3.60; மத்திய அரசு வரி ரூ 32.98; மாநில அரசு வரி ரூ17.97 ஆகியவை அடக்கம்… வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் 227% அளவுக்கு பெட்ரோலுக்கு வரிவிதிக்கப்படுகிறது.

இதைப் போன்றே ஒரு லிட்டர் டீசல் ரூ 23.23 எரிபொருள் நிலையங்களுக்கு விற்கப்பட்டது. நுகர்வோர்கள் இதையே ரூ 71.29 கொடுத்து வாங்க வேண்டும். இதில் மத்திய அரசின் வரி விதிப்பு 31.83 – ம் மாநில வரி விதிப்பு 13.70 – ம் அடக்கம். டீசல் மீது மட்டும் 191 % அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது…

இதே ஜூன் 16 – ம் தேதியில் இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை…

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே