முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் யார் யார்?

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு சரியாக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன், பாஜகவின் சார்பில் இல கணேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் காங்கிரஸ் பிரமுகர்கள் கே.எஸ் அழகிரி தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர், அதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ திருமாவளவன் ஈஸ்வரன் முத்தரசன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த அழைப்பை ஏற்று அரசியல் கட்சி பிரமுகர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று பதவி ஏற்க இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ கொள்ளும் இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே