சசிகலாவுக்காக யாரெல்லாம் பணம் கட்டினார்கள்? – டிடியில் உள்ள பெயர்கள் விவரம்..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார்.

அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி விண்ணப்பித்திருந்தார்.

அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ஆர்.லதா, “சிறை ஆவணங்கள்படி சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை ஆகலாம். 

ஆனால் அபராதத் தொகையை செலுத்த தவறினால், 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம்” என்று கூறி இருந்தார்.

வழக்கமான நடைமுறைகளின்படி, ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தி உள்ளார்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் வழங்கினார்.

இந்நிலையில் தற்போது, சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி,

பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை

வசந்தா தேவி என்பவர் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது

ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்து வழங்கியுள்ளார்

விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே