டெல்லியில் வன்முறையை தடுத்து நிறுத்தாமல் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது : மு.க ஸ்டாலின்

டெல்லியில் வெடித்த வன்முறையை தடுத்து நிறுத்தாமல் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியுமா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் முதலமைச்சர் சிறை செல்ல வேண்டியிருக்கும் எனவும் மு.க ஸ்டாலின் விமர்சித்தார்.

இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருவதாக தெரிவித்தார்.

சிறுபான்மையினர் மீது தாக்குதல்களும் பொய் வழக்குகளும் புனையப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அய்யா வழி மடாதிபதி பால பிரஜாபதி அடிகளார், மதச்சார்பற்ற இந்தியாவுக்கு ஒரு போதும் பாதிப்பு ஏற்படக்கூடாது என தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் சென்று யாதும் ஊரே யாவரும் கேளீர் என முழங்காமல், உள்நாட்டில் அதன்படி செயல்படுமாறு பேசினார்.

இந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் மமக தலைவர் ஜவாஹிருல்லா, இந்து என்.ராம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே