கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தவிர்க்க வேண்டியவை எவை..?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்கலாம், அதே போல் எடுத்துக்கொள்ளக்கூடிய மற்றும் தவிர்க்க வேண்டிய மருந்துகள் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள் :

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எப்போதும் போல் எல்லா உணவுகளும் சாப்பிடலாம்.
1.பருப்பு வகைகள், சூப் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
2.கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
3.புரதச்சத்து மிக்க உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவை :

1.அசைவ உணவால் செரிமான பிரச்னை ஏற்படும் என்பதால் தின தினங்களுக்கு தவிர்க்கலாம்.
2.எந்த தடுப்பூசி போட்டாலும் 72 மணி நேரத்துக்கு மது அருந்தக்கூடாது என்பது விதி.
3.கொரோனாவை கருத்தில் கொண்டு மது அருந்தாமல், புகை பிடிக்காமல் இருப்பது நல்லது.

எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் :

1.சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்
2.சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் சரியாக இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய மருந்துகள் :

1.இதய கோளாறுக்கு மருந்து சாப்பிடுபவர்கள், ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வோர் மருத்துவரின் அறிவுரையை பெற வேண்டும்.
2.எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரையை பெறுவது அவசியம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே