களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டம்..; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

தீபாவளி பண்டிகை இன்று, நவ.,14ம் தேதி நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துக்களின் புனிதப் பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கையில் துன்பம் என்னும் இருளை நீக்கி மகிழ்ச்சி என்னும் ஒளியை வழங்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்னாளில் மக்கள் அனைவரும் அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப்பொருட்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வர்.

தீபாவளியன்று காலை, மாலை இரு வேளைகளிலும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். 

பெரும்பாலான மக்கள் அன்றைய தினம் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவார்கள்.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமில்லாமல் சமண, புத்த, சீக்கிய மதத்தினை சேர்ந்தவர்களும் இப்பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நன்னாளில் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜவுளி மற்றும் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

முககவசம் அணிந்து கொரோனாவை விரட்ட வேண்டும் என்று காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் இன்று அனைத்து தரப்பினராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனால், கடந்த 2 நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இதேபோல், சென்னையில் இருந்து 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

மேலும், தீபாவளி என்றாலே புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை தான் அதிகமாக இருக்கும். கொரோனா பரவல் இருந்தாலும் கடந்த 2 தினங்களாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

ஒருபக்கம் தீபாவளி விற்பனை சூடுபிடிப்பது போல் மறுபக்கம் டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை சூடுபிடித்து வருகிறது.

புத்தாடைகள் உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாக தீபாவளியை கொண்டாட தயாராகிவிட்டனர்.

அனைத்து கோயில்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே