புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியுள்ளனர்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு நாளன்று டெல்லியை முற்றுகையிட்டும், அனைத்து மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டும் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக இன்று டெல்லியைச் சுற்றி நான்கு எல்லைகளிலும் டிராக்டர் பேரணி நடத்தினர்.

அரியானாவில் பால்வால் என்னுமிடத்தில் இருந்து சிங்கு, திக்ரி சோதனைச்சாவடிகள் வரை டிராக்டர் பேரணி நடைபெற்றது.

மேலும் டிராக்டர் பேரணி நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறுகையில், ‘ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது.’ என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே