உங்கள் துக்கத்தில் நாங்கள் தோள் கொடுப்போம் – ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்!

ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்னத் தல தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்பினார்.

அவரது மாமா மற்றும் குடும்பத்தினரை சில கொள்ளையர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டியதில் மாமா இறந்ததாகவும், உறவினர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே பால்கனி அறை கொடுக்காததால் தான் ரெய்னா கோபப்பட்டு வந்து விட்டதாக சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கூறியதாக தகவல்கள் கசிந்தன.

அவற்றை பின்னர் சென்னை அணி நிர்வாகம் மறுத்து செய்தி வெளியிட்டது. ரெய்னாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தது.

உறவினர்கள் கொல்லப்பட்டதாலேயே தாயகம் திரும்பியதாக ரெய்னாவும் ட்வீட் செய்திருந்தார்.

இரக்கமற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், இன்னொரு குடும்பத்தை அவர்கள் கொள்வதற்குள் அவர்களைப் பிடிக்க வேண்டும் எனவும் ரெய்னா ட்வீட் செய்திருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2690 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே